Tuesday, October 2, 2012

காதல் தோல்வியின் வலிகள் !


காதலில் தோல்வியுற்ற ஒருவனின் இதயத்தின் வலிகள்.......................................!!
.

 கனவு கண்டு தினம் தேயிந்து 
வாழ்க்கையை தொலைத்ததுண்டு 
ஒரு பெண்ணை காதல் கொண்டு....!!

உடலாவிய மாற்றங்களும் மனதில் ஏற்ப்பட்ட சீற்றங்களும்
 சொல்லி விட முடியாது காதலெனும் போதையில் விழுந்ததுண்டு 
வாழ்க்கையெனும் பாதையை மறந்ததுண்டு...!!

காதலிலே தோல்வியுற்று கல்லறையி...லே மேய்ந்ததுண்டு

தேடிவந்த வாழ்க்கையை இழந்ததுண்டு 
கண்ணீரை துடைக்க வந்த கரங்களை உதறி தள்ளியதும் உண்டு


தாடியோடு மறைந்துபோன என் முகம் கண்டு 
நான் காதலித்தவளே எனக்கு பிச்சை போட்டதும் உண்டு

துக்கம் தாங்காமல் நான் மரக்கிளைகளிலே தொங்கியதும் உண்டு
என் பாரம் தாங்காமல் மரக்கிளைகள் உடைந்து போனதும் உண்டு

மதுபாட்டிலுடன் தள்ளாடி மானமிலந்ததும் உண்டு
காவல் நிலையத்தில் அதற்காக உதை வாங்கியதும் உண்டு

எப்பொழுதும் அவள் பெயரேயே உச்சரித்ததும் உண்டு
அதனால் நான் பைத்திய காரன் என்று முத்திரை குத்தப்பட்டதும் உண்டு

உடைந்து போன மதுபாட்டிளால் அவள் பெயரை என் கரங்களிலே எழுதியதும் உண்டு
வலியால் துடித்து போனதும் உண்டு

மது பாட்டிலோடு விஷ பாட்டிலும் வாங்கியதும் உண்டு
இரண்டையுமே கலந்து குடித்ததும் உண்டு

விஷம் உடலுக்குள் கலக்கும் போது நான் அங்கும் இங்கும் ஓடி துடிதுடித்ததும் உண்டு

தன்னிலை மறந்து மயங்கி கிடந்ததும் உண்டு



நான் கண்விழித்த போது மரணமும் என் நிலை கண்டு ஓடி போனதும் உண்டு

தற்கொலை முயற்ச்சி என்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் உண்டு

அதனால் என் குடும்பம் கேவலப்பட்டதும் உண்டு
எனக்காய் என் பெற்றோர் கண்ணீர் விட்டதும் உண்டு

என் கவலைகளை மறக்க நான் முயற்ச்சி செய்ததும் உண்டு

கவிதை எழுத தெரியாமலேயே கவிதை எழுத வந்ததும் உண்டு 
கவிதைகளிலே என்னை பற்றியே நான் எழுதியதும் உண்டு

என் எழுத்துக்களால் பலர் கண்ணீர் விட்டதும் உண்டு

புது வாழ்க்கைதேடி நான் அலைவதும் உண்டு

காதலின் அருமை புரிந்ததுண்டு
காதலின் தவிப்பும் தவித்ததுண்டு
காதலின் வலியை உணர்ந்ததும் உண்டு

காதலால் வாழ்க்கை பாடம் கற்றதும் உண்டு
.
.

இப்போது வாழ்கிறேன் கவலைகளை மறந்ததாக என் அம்மாவிடம் பொய் சத்யம் செய்து நடித்துக்கொண்டு

.
என் அம்மாவிற்கு அழகான செல்ல குழந்தையாக மனதிலே அழுது கொண்டு...................
.
.
.
இப்படிக்கு...................
காதலில் தோல்வியுற்ற ஒருவன் ..

FIRNEDSHIP




ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... 
.
.


காதலுக்காய் அலைந்து திரிந்து
யாரையோ காதலிப்பதாய் நினைத்து உருகி
யாரிடமோ காதலைச் சொல்லி
யாரையோ கல்யாணம் பண்ணி வாழ்ந்து
சாகாமல் வாழ்வது எப்படி
செத்துக் கொண்டிருந்தாலும்
சிரிப்பது எப்படி என்று
சிலரிடம் கற்றுக் கொள்ளவேண்டும்...
வாழ்க்கையின் ரணங்களைத் தாங்கியும்
தாங்க முடியாமல் வெடித்து அழுது
வெளியே ஒன்றுமே நடக்காதது போல்
பாவனை செய்யும் எத்தனை பேர்...


.

அவர்களுக்காக ஒரு நிமிடம்...
சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
பாதகமாக இருந்தாலும்
பிடிக்காததையே பிடித்ததுபோல்
மற்றவருக்காக சிரித்தாலும்
கண்ணுக்குள்ளேயே அமுங்கும் கண்ணீர் கொப்பளிக்கக் கூட முடியாமல் திணறி அடுப்பங்கரை கழிப்பிடங்களில்
அழுதாவது தீர்க்க முடிகிறதே-
துயரம் நெஞ்சை அடைக்க
ஒரு வடிகாலாய் மிஞ்சுவது கண்ணீராயினும் அதுவே மனசை லேசாக்க...  .
.

இவர்களுக்காய் ஒரு வாழ்க்கை 
வெளியேஒரு வாழ்க்கை உள்ளே மனதில்
இப்படி இரண்டு பட்ட செயல்களால்
செய்வதறியாமல் போனாலும்
சம்பிரதாயமோ ஏதோ ஒன்று உந்தித் தள்ள
சாவதற்கும் துணிவில்லாமல்
வாழ்வதற்கும் வழி தெரியாமல்
தவிக்கும் நெஞ்சங்களுக்கு
ஒரு மயில் பீலி கொண்டு வருடினாலும்
வலிக்குமோ என்னவோ...
இவர்களுக்கும் விடிவு காலம் தெரியட்டும்
ஆசைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கட்டும்...  .
.

உறவோடு ஒட்டி வாழ முடியாதவர்கள்
ஆனாலும் உறவை விட்டு விலகாதவர்கள்
உறவுக்காகத் தன் உணர்வுகளை எரிப்பவர்கள்
உறவுக்காகவே உயிரை விடுபவர்கள்
மனம் ஒன்று நினைக்க வாய் ஒன்று பேச
நினைப்பதெல்லாம் பேச முடியுமா என்று
தத்தளித்தும் எதிர் நீச்சல் போடும் உத்தமர்கள்
இந்தப் பாடு படத்தான் வேண்டுமா என்றால்
எந்தப் பாடு பட்டாலும் குடும்பம் குட்டிக்காக
எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக
காட்டிக் கொள்கிறார்கள் பல பேர்
நிம்மதியும் சந்தோஷமும் சிறிது நிற்கட்டும் இவர்களிடம்...